• Nov 10 2024

விக்ரம் படத்திற்காக ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய கமல்ஹாசன்- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகவத் பாசில் என பல நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ளதோடு இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிரூத் இசையமைத்துள்ள இப்படமானது வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இத்திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது.

இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 173 நிமிடங்கள் ஓடும் எனவும் அமெரிக்காவில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரிமீயர் காட்சி திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்ரம் திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ள நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கமல் தனது கதாபாத்திரத்துக்கு தானே டப்பிங் பேசியுள்ளாராம். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement