தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடச்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் கமல் மற்றும் ரஜனிகாந்த .இவர்கள் இருவரும் தங்களுடைய ஆரம்பகால சினிமா வாழ்கையில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதை நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாசன் கொடுத்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்தும், அவருடைய திரையுலக பயணம் குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது…
‘ நானும் ரஜினியும் ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்துகொள்வோம். அப்போது ஒருமுறை, நீங்கள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி, ஸ்டைலான கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்கிறீர்கள். இனியாவது வெவ்வேறு கதாப்பாத்திரங்களை தேர்ந்தேடுத்து நடிக்க வேண்டும் என்று ரஜினியிடம் சொன்னேன். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டு. அதை நீங்க பண்ணுங்க, எனக்கு எப்பவுமே ஸ்டைல் தான், என்று கூறினார். அந்த சமயத்தில் அவருக்கு இருந்த தெளிவு.
மேலும் இது தான் என்னுடைய பாதை என்று அவர் முடிவெடுத்த விதம். அவர் நினைத்து இருந்தால். எந்த மாதிரியான கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் செய்திருக்க முடியும்.
அவர் இன்ஸ்டியூட் சென்று நடிப்பை படித்தவர்.அத்தோடு நான் கூட அப்படி படிக்கவில்லை. ஆனால், இது தான் என்னுடைய பாதை என்று, அப்போதே முடிவெத்து வீதியை மதியால் வென்றவர் ரஜினிகாந்த் ‘ என தெரிவித்துள்ளார் கமல்.
கமல் ஹாசன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ரஜினியின் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. அத்தோடு ரஜினிகாந்த் - கமல் கூட்டணியில், ராஜ் கமல் நிருவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!