நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது.இந்தியன் 2, கேம் சேஞ்சர் என மாறி மாறி ஷுட்டிங்கை நடத்தி வந்தார் .கடந்த 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அங்கிருந்த கிரேன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து, கொரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தடைப்பட்டது.இதனையடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதன் ஷுட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.
லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகின்றார்.இந்த நிலையில் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இந்தப்படத்தில் வரும் வயதான கேரக்டருக்காக கமல் தினமும் நான்கு மணிநேரம் மேக்கப் போடுகிறாராம். இந்த மேக்கப் ஆறு மணிநேரம் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் படப்பிடிப்பையும் நிறைய செய்ய வேண்டுமாம். மேலும் இந்த மேக்கப்பில் இருக்கும் போது திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ள முடியாதாம்.
இடையில் ஜுஸ் போன்ற திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள முடியுமாம். கமல் இந்த வயதில் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு நடிப்பது மொத்த குழுவுக்குமே ஆச்சரியமாம். இந்நிலையில் தற்போது 'இந்தியன் 2' படத்தில் கமலின் போர்ஷன் கிட்டத்தட்ட முடிந்துள்ளதால் மொத்த படக்குழுவும் நிம்மதியடைந்துள்ளனராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!