தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவரது நடிப்பில் தற்பொழுது விக்ரம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாசில் சூர்யா ஆகியோரும் மக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என்பன அண்மையில் வெளியாகியிருந்தது. இப்படமானது வரும் ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகும் என்று ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் வரும் மே 27 ஆம் திகதி கொச்சியில் உள்ள லூலூ மாலில் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை கமல் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜும் உடன் செல்ல உள்ளார். இதை கேரளாவில் படத்தை வெளியிடும் ஷிபு தமீம்ஸ் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- பங்களாவின் மதிப்பே இவ்வளவு பெறுமதியா?
- எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்
- “முடியாதுமூடிட்டு போடி” பிரபல சீரியல் நடிகையை திட்டிய காஜல்- ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வரும் ரசிகர்கள்
- ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!