நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார்.மேலும் அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம்.
எனினும் இதனை தொடர்ந்து படங்கள் நடித்து வந்த கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இயக்கிய படம் விஸ்வரூபம். இரண்டு பாகமும் வெளியாகி மாஸ் காட்டியது.மேலும் 2018 தான் அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி படம். அதன்பிறகு கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்துவிட்டார்.
இடையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டார், ஆனால் படம் பிரச்சனையால் பாதியில் நிற்கிறது. அத்தோடு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
படம் வரும் ஜுன் 3ம் தேதி படு மாஸாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷனில் கமல்ஹாசன் பிஸியாக இருக்க பட வியாபாரமும் அமோகமாக நடக்கிறது.
அத்தோடு பகத் பாசில், விஜய் சேதுபதி என நடிப்புக்கு பெயர் போன நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள். மேலும் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார், தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இப்படம் வெளிநாடுகளில் ப்ரீமியர் புக்கிங்கில் மட்டும் இதுவரை $150k டாலர வசூலித்துள்ளதாம்.
Listen News!