• Sep 20 2024

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் திகதி அறிவிப்பு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக நாயகன் என்ற பட்டத்தோடு வலம் வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பில் விக்ரம் என்னும் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தினை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இவர்களின் கூட்டணி அமைவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.

இந்த நிலையில் மே 15-ஆம் தேதி ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement