விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பூகம்பம் என்னும் டாஸ்க் நடைபெற்றது.இதில் விசித்ரா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடூரம் பற்றி தெரிவித்திருந்தார்.
அதாவது “ஒரு டாப் ஹீரோ படத்தில் நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாள் என்னை பார்த்த அவர், எனது பெயரைக்கூட கேட்காமல் இன்று இரவு என்னுடைய அறைக்கு வந்துவிடு என்று சொன்னார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவருடைய ஆட்களை அனுப்பி எனது அறை கதவை தட்ட வைத்தார். அதுமட்டுமின்றி ஒரு ஆக்ஷன் காட்சி படமாக்கும்போது என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார். அதை சண்டை பயிற்சியாளரிடம் சொன்னபோது அவர் என்னை ஓங்கி அறைந்துவிட்டார்.
எனக்கு திரைத்துறையிலிருந்து யாருமே ஆதரவாக நிற்கவில்லை. அதனால்தான் நான் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டேன். நடிகர் என்னை தொந்தரவு செய்தபோது அந்த ஹோட்டலின் மேனேஜர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையை எனக்கு ஒதுக்கிக்கொடுத்தார். அவர்தான் இப்போது எனது கணவர்” என்றார். இவரின் இந்தப் பேச்சு ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று கேமல்ஹாசன் எப்பிஷோட் என்பதால் அதில் பேசிய கமல்ஹாசன்,“இன்று நான் ஒருவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த குழந்தைகளையும் தன்னைப் போலவே நல்லவராக வளர்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் நன்றி சொன்ன நபரின் பெயர் ஷாஜி. விசித்திராவின் கணவர். அவரிடம் பேசியபோது ஒரு விஷயம் சொன்னார், 'விசித்ரா அந்த சம்பவத்துக்கு பிறகுதான் எனக்கு மனைவி ஆனார்.
ஆனால் அந்த இடத்தில் யார் இருந்தாலும் அப்படித்தான் நான் உதவியிருப்பேன்’ என்றார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதேபோல் விசித்ராவுக்கும் நாம் கைத்தட்ட வேண்டும். ஏனெனில் அவர் சொல்லியபோது அவரது சோகம் இருந்தது. ஆனால் மனதுக்குள் குரோதம் இல்லை. அந்த ஹீரோவின் பெயரை சென்சார் செய்துவிட்டார். ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசினார். அது அவரது பக்குவத்தை காட்டுகிறது” என்றும் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!