• Sep 20 2024

புதிய திட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்- அவருடன் கைகோர்த்த இயக்குநர் எச்.வினோத்- அரசியலில் இவரும் இணைந்துள்ளாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


துணிவு படத்தைத் தொடர்ந்து இயக்குநர்  எச்.வினோத்,கமல்ஹாசனின் 233-ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர்,கமல்ஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்று நம்பப்படுகின்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக முதலே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், இயக்குநர் எச்.வினோத் இணைந்துள்ளாரா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.


பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பாதுகாத்து மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மை துறைக்கும், வேளாண்மையை பயில்கிறவர்களுக்கும், பயிற்சி விற்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலை இல்லாமல் அளித்து வருகிறது பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பு.

இந்த அமைப்பினர் இன்று கமலைச் சந்தித்துள்ளனர்.அவர்களிடம் பேசிய கமல்ஹாசன், திருத்தி எழுதப்பட்ட புனை வரலாற்றில் இருந்து, நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பது தான் இன்றைய அரசியல். தமிழர்களின் மரபிலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும், நமது வேளாண்மைக்கும்... உணவு பழக்கத்திற்கும் மறுக்க முடியாத இடம் உண்டு. வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர் நிலைகளையும், மீட்டெடுத்தே ஆக வேண்டும்.


 ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினைக்கிறேன். கைவிடப்பட்ட ஊர் கிணறுகளை மீட்டெடுக்கும் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். உடனடியாக எனது ஆதரவையும் பங்களிப்பையும் அவர்களுக்கு நல்கினேன். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும் பரவலாக்கம் செய்வதற்கும், நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை. என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனுடன் இயக்குநர்கள் எச். வினோத் மற்றும் ரா. சணவணன் ஆகியோர் இருந்தனர். எனவே எச். வினோத் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement