• Nov 14 2024

முன்னாள் மனைவியுடன் முக்கிய பிரபலத்தின் திருமணத்திற்குச் சென்ற கமல்ஹாசன்- அடையாளமே தெரியாத அளவு மாறீட்டாங்களே..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர்,நடிகர், கதை ஆசிரியர் எனப் பன் முகத் திறமை கொண்டவராக விளங்குபவர் தான் கமல்ஹாசன். அவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் இவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இதனை அடுத்து தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

'இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.அதன் படி இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்ரகாஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.


இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் மகன் திருமணத்தில் 80ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகைகளாக இருந்த சுஹாசினி, ராதிகா, லிஸி மற்றும் இவர்களுடன் வாணி கணபதியும் கலந்து கொண்டார். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை சுஹாசினி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கமல் கடந்த 1998 -ம் ஆண்டு வாணி கணபதி திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement