தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் கமல்ஹாசன். இவர் நவம்பர் 7ம் தேதி, 1954ம் ஆண்டு பரமக்குடியில் ஸ்ரீனிவாசன், ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக உருவெடுத்த இவர் 50 வருடங்களுக்கு மேலாக கதாநாயகனாக மாத்திரமே நடித்து வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதோடு பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோவையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.
இவருக்கு திரையுலவைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.கமல்ஹாசன் சினிமா, விளம்பரம், பிக் பாஸ், தயாரிப்பு என ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வருவதாக கூறுகின்றனர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 40 கோடி ரூபாய். ஆனால், இந்த ஆண்டு அந்த கணக்கு தாண்டியிருக்கும் என்றே தெரிகிறது.
சென்னையில் வீடு மற்றும் அலுவலகம் பல ஆண்டுகளாக கமலுக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 19 கோடி ரூபாய் மதிப்பில் அவருக்கு சென்னையில் வீடு ஒன்றும் ஒட்டுமொத்தமாக வணிக அலுவலகங்கள் மற்றும் நிலங்கள் என சேர்த்து 92 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கூறுகின்றனர். இவை போக லண்டனில் 2.5 கோடிக்கு ஒரு வீடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் விஜய், அஜித் போல கமலுக்கு கார்கள் மீதெல்லாம் அதிக நாட்டம் இல்லை என்றே தெரிகிறது. BMW 730LD மற்றும் Lexus Lx 570 என இரு சொகுசு கார்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக 3.79 கோடி மதிப்புக்கு உள்ளதாக கூறுகின்றனர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து வரும் கமல்ஹாசன் பல படங்கள் தயாரித்து நஷ்டம் அடைந்துள்ளார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவுக்கே செலவு செய்துள்ளார் என்று கூறுகின்றனர்.
ஆனாலும், ஒட்டுமொத்தமாக அவரிடம் 50 மில்லியன் டாலர் சொத்து உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் என்கின்றனர். ஆனால், சமீபத்தில் கமல் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த சொத்து விபரத்தில் அவருக்கு 177 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Listen News!