• Nov 17 2024

பணமின்றி கஷ்டப்படுவதால் மீண்டும் நடிக்க வந்த கமல்ஹாசனின் முன்னாள் மனைவி- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்பொழுது விக்ரம் என்னும் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு விரைவில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் கமல்ஹாசன் கடந்த 1988-ம் ஆண்டு நடிகை சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு சுருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளாகவும் காணப்படுகின்றனர்.

அத்தோடு கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதி கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து கமல் நடிகை கௌதமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் பிரிந்தபோதும் இருவரும் அப்பா அம்மா இருவர் மீதும் அன்பு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சரிகா, தான் லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்தோடு இவர் சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்காக ஒருமுறை தேசிய விருது வென்ற இவர், ஹே ராம் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை வென்றார்.

கமலை திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சரிகா, லாக்டவுன் சமயத்தில் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டதால் சீரியலில் நடிக்க சென்றதாக கூறியுள்ளார். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தான் தனது அன்றாட செலவுகளை பார்த்து வருவதாக சரிகா கூறியுள்ளார்.

2 மகள்களும் நடிகையாக இருக்கும்போது, பணமின்றி கஷ்டப்படுவதாக நடிகை சரிகா கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement