• Nov 10 2024

மாமன்னன் படத்தைப் பார்த்த கமல்ஹாசன் சொன்ன விமர்சனம்- நடுங்கிப் போய் இருக்கும் மாரி செல்வராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்த உதயநிதியின் கடைசி படமாக 'மாமன்னன்' உருவாகியுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற பின் சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் முழுக்கவனம் செலுத்த போவதாக உதயநிதி அறிவித்தார். இதனையடுத்து கமலின் தயாரிப்பில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 'மாமன்னன்' படம் அவரது கடைசி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகின்றார். இப்படத்தில்  வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.


இந்நிலையில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. கமலை வைத்துக்கொண்டே மேடையில் 'தேவர் மகன்' படத்தை விமர்சிப்பதை போல் பேசி இருந்தார் மாரி செல்வராஜ். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், நான் ரொம்ப எமோஷனலான தருணம் அது. கமல் சார் 'மாமன்னன்' படத்தை பார்த்துவிட்டார். படம் பார்த்துவிட்டு என் கையை பிடித்து அவர் வாழ்த்திய போது என் உடல் நடுங்கிவிட்டது. 'மாமன்னன்' படத்தை உணரக்கூடியவர் அவர். 'மாமன்னன்' ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த விஷயம் எமோஷனலான தருணம்.


என் கையை தொட்ட கமலுக்கு அந்த உண்மை தெரியும் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் . 'மாமன்னன்' படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் முழுக்க முழுக்க வேறு விதமான வடிவேலுவை காண்பித்துள்ளார் . இதனாலே ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'மாமன்னன்' படம் வரும் 29 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement