• Sep 21 2024

அரபிக்குத்து பாடலை முறியடித்த, கமல் ஹாசனின் பத்தல பத்தல பாடல்- இத்தனை மில்லியன் பார்வையாளர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் . இப்படத்தில் நம்ம தளபதி விஜய், மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருந்தனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அனிரூத் இசையமைத்திருந்தார்.

படம் திரைக்கு வருவதற்கு முன்னரே சிவகார்த்திகேயனின் வரிகளில் அமைந்த அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . பாடலும் பட்டித்தொட்டி எல்லாம் மாஸ் ஹிட் கொடுத்தது.

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அரபிக் குத்து ஸ்டெப் போட்டனர். இந்த பாடல் வெளியாகி மூன்று நாட்களில் யூடியூப்பில் மட்டும் 16 மில்லியன் பார்வைகளை பெற்றது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசனின் நடிப்பில்,வெளியாக இருக்கும் படம் விக்ரம், இந்தப்படத்தின்ட்ரெய்லர் கடந்த நாட்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்தப்படத்திற்காக உலகநாயகன் கமல் ஹாசன் பத்தல பத்தல என்னும் பாடல் பாடினார்.

பாடல் வெளியாகிய மூன்று நாட்களில் 17 மில்லியன் பார்வைகளை குவித்து அசைக்க முடியாத, அரபிக் குத்து பாடல் சாதனையை முறியடித்துள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement