• Sep 20 2024

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் குரலால் மிரட்டிய கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது இந்த தொடக்கவிழா போட்டிக்கு பல பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் இதில் முதல்வர் ஸ்டாலின் உடன் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பார்வையாளராக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பெருமைகளை எடுத்துக்கூறும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது.மேலும் அந்த வீடியோவுக்கான வாய்ஸ் ஓவர் குரலை நடிகர் கமல்ஹாசன் பேசி இருந்தார்.

இந்நிலையில் அந்த பின்னணிக் குரலுக்காக கமல்ஹாசன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர் குழுவினரோடு கலந்துரையாடும் வீடியோவை இப்போது பகிர்ந்துள்ளார். அத்தோடு இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement