• Sep 21 2024

கேரளாவில் மட்டும் கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதா!! -அட எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

படம் ஒன்று வெளியாகினாலே முதலில் நோக்குவது வசூலை தான். அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் நேற்று விக்ரம் திரைப்படம் வெளியாகியது. ரசிகர்களும் படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். 4 வருடங்களின் பின்னர் ஆண்டவரை திரையில் காண ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் விக்ரம் படம் ரூ. 20 முதல் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.71 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது என்ன தகவல் என்றால் கேரளாவில் மட்டும் படம் ரூ. 5 கோடி முதல் நாளில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் விக்ரம் படம் வசூலில் களைகட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement