சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை உலக
நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை தேசிங்கு
பெரியசாமி இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்திற்காக வெளிநாட்டிற்கு
சென்று உடல் தகுதியுடன் சிம்பு
திரும்பி வந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ்
பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த செய்திகள் எதுவுமே
தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் படப்பிடிப்பும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் இன்னும் தொடங்காததை அடுத்து இந்த படத்தில் சிக்கல்
இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் தனது
தந்தையிடம் சிம்புவை வைத்து படம் எடுத்து ரிஸ்க்
எடுக்க வேண்டாம் என்றும், 100 கோடி ரூபாய் செலவு
செய்து படம் எடுக்கும் அளவுக்கு
சிம்பு படம் வியாபாரம் ஆகாது
என்று போட்டுக் கொடுத்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம்
சிம்பு காட்டும் ஆட்டிடியூட், சரியாக படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுப்பார் என்பது உள்பட கமல்ஹாசனிடம் அவர் பல விஷயங்களை
கூறியதாகவும் இதனை அடுத்து கமல்ஹாசன்
இந்த படத்தை தற்போதைக்கு நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த படத்திற்காக ஒரு
வருடம் காத்திருந்த சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரும் அதிர்ச்சி
அடைந்திருப்பதாகவும் கமல்ஹாசனின் பாசிட்டிவ் பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தை ரஜினியை
வைத்து இயக்க தேசிங்கு பெரியசாமி முடிவு செய்திருந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படம் தமிழ்
ஆடியன்ஸ்களுகளுக்கு செட் ஆகாது என்று
கூறி தயாரிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
Listen News!