கமல் படத்தை வெளியிட விட மாட்டேன் என முட்டுக்கட்டை போட்ட முதலமைச்சர் தற்போது பதவியில் இல்லை என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் நடித்த படம் ’கல்கி 2898ஏடி’. இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியும் இன்று காலை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை ஆந்திராவில் வெளியிட விடமாட்டேன் என அம்மாநில முதலமைச்சராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நான் 600 கோடி ரூபாய் செலவு செய்து இந்த படத்தை எடுத்து உள்ளேன் என்று கெஞ்சி பார்த்தும் முதலமைச்சர் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது நடந்த தேர்தலில் அவரது கட்சி ஆட்சியை இழந்து விட்டது என்றும் அவரும் முதல்வர் பதவியை இழந்து விட்டார் என்று கூறிய தயாரிப்பாளர், சந்திரபாபு நாயுடு ஆட்சி என்பதால் எங்கள் படத்திற்கு ஆந்திராவில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜெகன் மோகன் கட்சியின் எம்எல்ஏவானா நடிகை ரோஜாவும் தோல்வி அடைந்து விட்டார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடைசி வரை அவர் அந்த பேட்டியில் ’கல்கி 2898ஏடி’ திரைப்படத்தை எதற்காக முதலமைச்சராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட விடமாட்டேன் என்று கூறிய காரணத்தை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!