முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளது விஜய்யை மறைமுகமாக தாக்கியதாக கருதப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாவது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் ’விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவது அவரது பாணி என்றும் ஆனால் நான் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் இருப்பேன் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
முழு நேர அரசியல்வாதி என்று யாரும் கிடையாது என்றும் மக்கள் மட்டும் தங்கள் கடமையை முழுமையாக செய்கிறார்களா? ஓட்டு போட கூட வருவதில்லை என்றும் 40 சதவீதம் பேர்கள் தான் தேர்தலில் ஓட்டு போட வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
விஜய் சினிமாவில் விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவரது பாணி என்றும் அந்த பாணியை நான் குறை சொல்ல மாட்டேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த அரசியல்வாதியும் முழு நேர அரசியல் செய்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி என்னை கேள்வி கேட்கும் மக்கள் 40% கூட வாக்கு செலுத்த வரவில்லை என்றும் தேர்தல் நேரத்தில் கூட வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று நீங்கள் ஒரு முழு நேர குடிமகனாக இருந்து விட்டு அதன் பிறகு என்னை கேள்வி கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ’தளபதி 69’ படத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டு முழுநேர அரசியல்வாதியாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்த புதிதில் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக இருப்பேன் என்று கூறிய நிலையில் அதன் பின்னர் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டு தனது வாக்குவதையும் மறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!