• Sep 20 2024

360 டிகிரியும் வெடித்து சிதறும் அளவுக்கு கமல் சாரின் நடிப்பு சூப்பராக இருந்தது- இயக்குநர் சங்கர் புகழாரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜுன் மாதம் 3ம் திகதி திரையரங்குளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்ததோடு விஜய்சேதுபதி பகத் பாசில் சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயை இதுவரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தைப் பார்த்துள்ள இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ள டுவிட் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் சாரை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. 360 டிகிரியும் வெடித்து சிதறும் நடிப்பு. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் எடுத்து முடியவில்லை . இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement