• Sep 20 2024

கமல் சேர் கார் எல்லாம் வாங்கிக் கொடுக்கல, அது இன்னும் வீட்டில தான் இருக்கு- கொந்தளித்த ஷர்மிகாவின் அப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோவையைச் சேர்ந்த 24 வயதே ஆன ஷர்மிளா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பேருந்தில் முதல் பெண் ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டார். அப்பொழுது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என சமூகம் கருதும் ஓட்டுநர் வேலையை ஒரு பெண் துணிச்சலுடன் செய்வதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டினார்கள்.

ஷர்மிளா பேருந்து ஓட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையம், ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் பகிரப்பட்டு வைரலானதை அடுத்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை பேருந்தில் ஏறி பயணித்தபடியே சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து ஷர்மிளா நீக்கப்பட்டார். ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்த கனிமொழி பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை செல்போனில் அழைத்து,பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கூறினார். 

ஆனால், அதற்கு ஷர்மிளா மறுப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்ட இருப்பதாக கூறியிருந்தார்.இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு சொந்தமாக தொழில் செய்ய மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை பரிசாக அளித்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.


ஆனால் தற்போது ஷர்மிளாவின் அப்பா அளித்திருக்கும் பேட்டியில் 'கமல் கார் எல்லாம் கொடுக்கல' என கூறி இருக்கிறார்."கமல் கார் எல்லாம் கொடுக்கல. 3 லட்சம் ரூபாய்க்கு மட்டும் செக் கொடுத்து 'கார் வாங்கிக்கம்மா' என கூறினார். அந்த செக் அப்படியே தான் வைத்திருக்கிறேன். அவர் கார் கொடுத்தார், 13 லட்சம் கொடுத்தார் என மீடியாவில் தவறாக செய்திகள் வருகிறது" என ஒரு youtube சேனலுக்கு போனில் அளித்த பேட்டியில் ஷர்மிளாவின் அப்பா கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement