• Sep 20 2024

கமல் சார் ஒரு அதிசயம் அவருக்கு இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்-நடிகர் வெங்கடேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம்'. இப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜுன் மாதம் 3ம் திகதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பகத் பாசில் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்தப் படத்தில் சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தெலுங்கில் படத்தின் பிரஸ் மீட் நிகழ்வு நடைபெற்றது. விக்ரம் படத்தை நடிகர் நிதின் குடும்பத்தினர் தெலுங்கில் வெளியிடுகின்றனர். விழாவில் நிதின், வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய வெங்கடேஷ் “ஒவ்வொரு நடிகருக்கும் மரோ சரித்ரா ஒரு ஜி.பி.எஸ். தசாவதாரம் போன்ற படம் பண்ணும் தைரியம் வேண்டும். ஆனால் இப்போது எந்த நடிகருக்கும் இல்லை. கமல் சார் ஒரு சிறந்த நடிகர். ஏக் துஜே கே லியே மூலம் அவர் முதல் பான் இந்தியா ஸ்டார் ஆனார். இன்று, அவர் தனது ஒப்பற்ற திறமையால் உலகளாவிய நட்சத்திரமாக இருக்கிறார். கமல் சார் ஒரு அதிசயம். அவருக்கு இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement