• Sep 21 2024

கமலின் திரைப்பயனத்தில் மாபெரும் சாதனை-தற்போது வெளியாகியுள்ள தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்துள்ளனர்.

மேலும் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 200 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் விக்ரம் திரைப்படம், இதுவரை வெளிவந்த வந்த கமலின் அனைத்து திரைப்படங்களின் வியாபாரங்களை விட அதிகமாக ரிலீசுக்கு முன்பே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement