• Sep 20 2024

கனாகாணும் காலங்கள் சீரியல் தீபிகாவின் வருங்காலக் கணவர் ராஜா வெற்றி பிரபு தானா?- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

அனைவரினதும் கல்லுாரிக் காலங்களை நினைவுபடுத்தும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியல் தான் கனாகாணும் காலங்கள். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது.

 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த சீரியலில் இரண்டாவது சீசன் தற்பொழுது டிஸ்னி பிளஸ்என்னும் பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது.இதில் அபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீபிகா.


நண்பன் கௌதம் காதலன் கலை இருவரையும் ஒன்று சேர்க்க இவர் செய்யும் செயல்கள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றது. இப்படியான நிலையில் இவருக்கு அண்மையில் திருமணம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.இதனால் தீபிகாவின் காதலன் யார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

அத்தோடு தீபிகா தன்னுடைய 6 வருட நண்பனைத் தான் திருமணம் செய்யவுள்ளதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவரது காதலன் யாரென்று அவர் தெரிவிக்கவே இல்லை. இப்படியான நிலையில் தீபிகாவின் காதலன் கனாகாணும் காலங்கள் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ராஜா வெற்றி பிரபுவைத் தான் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அண்மையில் தீபிகாவுக்கு அவரது காதலன் ப்ரபோஸ் செய்த வீடியோ வைரலானது அந்த வீடியோவில் தீபிகா அழும் போது அவரது வருங்கால கணவன் ஏன் அழுகிற என்று கேட்டிருந்தார். இந்த குரலை வைத்து பார்க்கும் போது அது ராஜா வெற்றி பிரபு தான் என்றும் கூறப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.



Advertisement

Advertisement