• Nov 14 2024

கனாகாணும் காலங்கள் சீரியல் அபிக்கு திருமணமாம்?- வருங்கால கணவர் யார் தெரியுமா?- கலை பாவம் இல்லையா அக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

அனைவரினதும் கல்லுாரிக் காலங்களை நினைவுபடுத்தும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியல் தான் கனாகாணும் காலங்கள். இந்த சீரியலுக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது.

 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த சீரியலில் இரண்டாவது சீசன் தற்பொழுது டிஸ்னி பிளஸ்என்னும் பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது.இதில் அபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீபிகா.


நண்பன் கௌதம் காதலன் கலை இருவரையும் ஒன்று சேர்க்க இவர் செய்யும் செயல்கள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றது. இப்படியான நிலையில் இவருக்கு அண்மையில் திருமணம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இது குறித்து அவர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது எனக்கு அவர் நல்ல ப்ரண்டா இருக்காரு. என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாத்தையுமே பார்த்திருக்காரு. கல்யாணம் எனக்கும் மாட்ரிமொனில பார்த்திட்டு இருந்தாங்க அவங்களுக்கும் பார்த்திட்டு இருந்தாங்க.ஒரு நாள் பேசாம நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று ஜாலியாக கேட்டது தான்.

பின்பு அதை பற்றி வீட்டில ஆரம்பிச்சு டக்கு டக்குனு முடிஞ்சிருச்சு. அப்பிடித் தான் என்னோட திருமணம் பிஃக்ஸ் ஆகிடுச்சு என்றார். மேலு் இவர் யாரைத் திருமணம் செய்யப் போகின்றார் என்ற விபரம் மட்டும் இன்னும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement