தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை கனகா. இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடிய நிலையில், எதிர்பாராத விதமாக நடிகையாக மாறினார்.
அந்தவகையில் இவர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான 'கரகாட்டக்காரன்' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்த படத்தின் பெயரை இவருக்கு அடையாளமாகவும் மாறியது. அதாவது தற்போது வரை ரசிகர்களால் 'கரகாட்டக்காரன்' கனகா என்றே அழைக்கப்பட்டு வருகின்றார்.
அந்தவகையில் இவர், சுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகியே உள்ளார். மேலும் காதல் தோல்வி, காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அத்தோடு உடல்நல பிரச்சனை காரணமாகவும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கனகா தன்னுடைய தந்தையுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புரத்தில் உள்ள, தன்னுடைய வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று மாலை இவரது வீட்டில் இருந்து, குபுகுபு என புகை வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்பு துறைக்கும் உடனடியாக சென்று தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகாவின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த பல உடைகள் எதிர்பாராதவிதமாக எரிந்து நாசமாகி கிடந்தன.
இதனால் புகைந்து கொண்டு இருந்த தீயையும் தண்ணீர் கொண்டு அணைத்தனர். மேலும் இது குறித்து கனகாவின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை செய்த போது, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது தீப்பொறி பட்டு வீட்டிற்குள் தீ பரவியதாகவும், அதனை கவனிக்காததால் மற்ற இடங்களுக்கும் தீ பரவி அருகே இருந்த துணிமணிகள் அத்தனையும் எரிந்து நாசம் ஆகியதாக கூறியுள்ளனர்.
எது எவ்வாறாயினும் இந்த சம்பவமானது அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது கனகாவின் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Listen News!