தமிழ் சினிமா உலகில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் தான் கனல் கண்ணன். குறிப்பாக இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியிருக்கிறார் கனல் கண்ணன்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்துவ மதபோதகர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது தொடர்பாக ஜோசப் பெணடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையிடம் கனல் கண்ணன் மீது புகார் ஒன்றினை அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருக்கிறார். ஆனால், விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் கனல் கண்ணன் எஸ்பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றிருக்கிறார். இதனையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி எங்கேயும் செல்லக்கூடாது எனக் கூறியிருந்தனர்.
அதுமட்டுமல்லாது பிறகு எஸ் பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். மேலும் விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் கனல் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், போலீஸ் விசாரணையின் முன் வெளியே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்று கண்டிப்பாக அவரிடம் பேசி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக கனல் கண்ணனுக்கும் போலீசுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!