2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா.அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார்.
மிகவும் துணிச்சலான, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து தேசிய விருது எல்லாம் பெற்றிருக்கிறார்.
இப்போது இவர் தமிழில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் கூட முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில் லீக் ஆகியிருந்தது.
பிரபலங்கள் எங்கு படப்பிடிப்பு சென்றாலும் அவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது கேரவன்.
அத்தோடு இந்த கேரவன் தனது சொந்த வீடு போல் இருக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரூ.65 லட்சம் செலவு செய்து வேனின் உள்கட்டமைப்பு வசதிகளை கங்கனா மாற்றி அமைத்திருக்கிறார்.
இவரை தாண்டி ஷாருக்கானின் கேரவன் மதிப்பு ரூ. 5 கோடி, சல்மானின் கேரவன் ரூ. 4 கோடியும், ஹிருத்திக் ரோஷன் ரூ. 3 கோடி செலவில் கேரவன் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
Listen News!