பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மையமாக கொண்டு ’எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி நடித்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அவர் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகை கங்கனா ரனாவத் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இருந்து வந்த கருத்துக் கணிப்பின்படி அவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவார் என்றும் பாஜக எம்பியாக அவர் உருவாகி விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ’எமர்ஜென்சி’ என்ற படத்தை கங்கனா ரனாவத் இயக்கி நடித்து வந்தார் என்பதும் இந்திராகாந்தி கேரக்டரில் அவர் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி விமர்சனங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல் பணி காரணமாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளை கவனிக்க முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக. அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் ஜூன் 14ஆம் தேதி வழியாக இருந்த எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியதோடு கங்கனா ரனாவத் நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு தேர்தல் களத்தில் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் திரைப்பட பணியை விட நாட்டின் பணியை முதன்மையானது என்று அவர் முடிவு செய்து விட்டதால் ’எமர்ஜென்சி’ படத்தில் தற்போது கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் ’எமர்ஜென்சி’ படத்துடன் அவர் திரையுலகில் இருந்து விலகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
Listen News!