பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கேங்ஸ்டர் படம் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 2008-ல் வெளிவந்த தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த கங்கனா, அதன் பின் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நடித்த திரைப்படம் தான் தலைவி.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கங்கனா. தற்போது இவர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகை கங்கனா ரனாவத் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஆவார். குறிப்பாக டுவிட்டரில் இவர் வெளியிடும் சர்ச்சை கருத்துக்கள் பேசு பொருள் ஆவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டதன் காரணமாக 2021-ம் ஆண்டு மே மாதம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் கங்கனா.
இந்நிலையில், தற்போது ஒன்றரை ஆண்டுகள் முடக்கத்திற்கு பின்னர் நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டிருந்த கங்கனாவின் பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதால் மீண்டும் பழையபடி அதிரடி காட்ட கங்கனா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Listen News!