இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் படத்தில் தனது பகுதிகளை படமாக்க பக்குழுவினருடன் இணைந்துள்ளார்.
படப்பிடிப்பிற்கு தயாராகி வரும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், “எனது வரவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் இணைந்துள்ளேன், இது மிகவும் வியத்தகு தோற்றம், நாங்கள் அனைவரும் அதைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த படத்தில், கங்கனா ரனாவத் தான் சந்திரமுகியாக நடிக்கிறார். அந்த புகைப்படத்தில் சந்திரமுகியாக மாறும் மேக்கப்பை தான் அவர் பகிர்ந்துள்ளார், இப்பொது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் ஜனவரியில், நடனமாடும் கிளைமாக்ஸ் பாடலுக்கான ஒத்திகையை கங்கனா ரனாவத் பார்த்தார். மேலும், அந்த நடன ஒத்திகையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை கூட சந்திரமுகி படக்குழு பகிர்ந்து இருந்தது.
இப்படத்தில் வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற எம்எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Back on the sets of my upcoming movie Chandramukhi 2… with me team … it’s a very dramatic look and situation… we are all very excited about it 🎭 pic.twitter.com/W6AIa5p2Ml
Listen News!