• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் திடீர் என்று சாவதற்கு அவர் மட்டும் தான் முதல் காரணம்- ஓபனாகப் பேசிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் திடீர் மரணம் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறைந்த வயதில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த நடிகர் மரணம் , அந்த நடிகர் மரணம் என்ற செய்தி அவரை சார்ந்த குடும்பங்களையும் சரி ரசிகர்களையும் சரி சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

சமீபத்தில் நடிகர் மயில்சாமியின் மரணம் திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. அதே போல் நடிகர் விவேக்கின் மரணமும் ஒட்டுமொத்த சினிமாவையும் பெரும் துக்கத்திற்கு கொண்டு சென்றது.


இப்படி பல நடிகர்களின் மரணத்திற்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரணம் தான் அனைத்து மொழி சினிமாவையும் சோகத்தின் உச்சிற்கே கொண்டு சென்றது. 40 வயதே ஆன புனித் ராஜ்குமாருக்கு இப்படி ஒரு சோகம் நடந்ததை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதுவும் காலையில் உடற்பயிற்சி செய்தவர் ஏதோ அசௌகரியங்களால் மருத்துவமனைக்கு செல்ல பாதியிலேயே உயிர் பிரிந்தது. கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார் புனித் ராஜ்குமார்.


இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரும் மருத்துவருமான காந்தராஜ் புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து சில தகவல்களை கூறினார். அவரிடம் நிரூபர் நடிகர்களின் மரணத்திற்கு அவர்கள் உடற்பயிற்சி செய்வதே மூலக்காரணமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த காந்தராஜ் 100 சதவீதம் அதுதான் காரணம் என்று கூறினார்.

மேலும் சாதாரணமாக மனிதனின் இதயதுடிப்பு நிமிடத்திற்கு 72 முறை துடிக்க வேண்டும். ஆனால் இவர்கள் ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயதுடிப்பை அதிகரிக்க வைக்கின்றனர். மேலும் மஸ்ஸில்ஸை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். அப்படி செய்வதன் மூலம் 60 வயதை யாரும் கடக்க முடியாது என்று கூறினார்.


 மேலும் சாதாரணமாக ஒரு ரப்பரை ஒரு அளவுக்குத்தான் இழுக்க முடியும். மேலும் இழுத்தால் அது பிய்ந்து விடும்.அதே போல் தான் மஸ்ஸில்ஸும். இதே போல் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு அவர் எடுத்துக் கொண்ட உடற்பயிற்சியும் அவரின் ஜிம் மாஸ்டரும் தான் காரணம். இதை எதிர்த்து அந்த ஜிம் மாஸ்டர் கேஸ் போட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்த மாஸ்டர் மட்டுமே காரணம் என்று காந்தராஜ் கூறினார்.


Advertisement

Advertisement