• Nov 17 2024

ஹேமாவிடம் நீ என் பொண்ணு என்ற உண்மையை உடைத்த கண்ணம்மா- அதிர்ச்சியில் பாரதி,

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா என்ன ஆசிரமத்துல கொண்டு போய் விட்டிடுங்க என சொல்ல எல்லோரும் அப்படி பேசாத நீ அனாதை கிடையாது என கூறுகின்றனர்.

அதன் பிறகு ஹேமா சமையல் அம்மா நீங்க தான் எதையும் கரெக்டா பேசுவீங்க என்ன எந்த ஆசிரமத்தில் இருந்து தூக்கி வந்தாங்களோ அங்கேயே கொண்டு போய் விட்டிடுங்க என சொல்ல கண்ணம்மா அனாதைன்னு சொல்லாத என கூறுகிறார். ஆனாலும் ஹேமா திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க வேற வழியில்லாமல் கண்ணம்மா நீ அனாதை கிடையாது உன்ன பெத்த அம்மா உயிரோடு இருக்கும் வரை நீ அனாதை கிடையாது என கூறுகிறார்.


உடனே ஹேமா என்ன சொல்றீங்க எங்க அம்மா உயிரோட இருக்காங்களா எங்க இருக்காங்க யார் அவங்க உங்களுக்கு தெரியுமா என கேள்வி மேல் கேள்வி கேட்க பிறகு ஒரு கட்டத்தில் சௌந்தர்யா தடுத்தும் அதை மீறி கண்ணம்மா உன்னுடைய அம்மா நான் தான். சமையல் அம்மா சமையல் அம்மானு கூப்பிட்டு இருந்த நான் தான் உன்னுடைய அம்மா உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா என கூற நீங்க என்ன சொல்றீங்க என கேட்க கண்ணம்மா ஆமாம் என கூறுகிறார். ஆனாலும் நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன். என்ன சமாதானப்படுத்த தான் இப்படி சொல்றீங்க என கூறுகிறார்.


அப்புறம் எப்படி நான் இந்த வீட்டுக்கு வந்தேன் என கேட்க நீ என் லட்சுமியும் ஒன்னா பிறந்த ரெட்டை குழந்தைங்க உன்னை யாரோ தூக்கிட்டு போய் ஆசிரமத்துல விட்டுட்டாங்க அந்த விஷயம் எனக்கு எட்டு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரியவந்தது. நீதான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சதும் உன்னை தூக்கிட்டு போக நான் வந்தேன் ஆனா இங்கே இருக்கவங்க அவ எங்க வீட்டு பொண்ண வளர இங்கேயே இருக்கட்டும் என கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க அதனால தான் விட்டுட்டு போனேன் என சொல்ல ஹேமா குழப்பம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement