• Nov 10 2024

கண்ணம்மாவுக்கு ரத்த காயம்..இயக்குநர் வெளியிட்ட தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். 

இத் தொடர்  தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. வில்லி வெண்பாவுக்கு ரோஹித் உடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அடுத்து பாரதி - கண்ணம்மா இருவரும் எப்படி ஒன்று சேர்வார்கள் என பார்க்கத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கும் நிலையில் அதன் முடிவு தெரிந்தால் தான் சீரியல் முடிவுக்கு வரும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது இந்த சீரியல் இயக்குனர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கண்ணம்மாவுக்கு ரத்த காயம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இது பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. 




Advertisement

Advertisement