தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் 2 வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் கண்ணான கண்ணே .
அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்திய கதை என்பதால் இந்த தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என ஒரு வாரத்திற்கு முன்பே தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. கடைசியாக மொத்த படக்குழுவினரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.இதனால் இந்த சீரியலை மிஸ் செய்யப் போவதாக ரசிகர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!