தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை சஹானா ஷெட்டி.இது தவிர இவர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் அழகு ஆகிய சீரியல்களில் நடித்திருக்கின்றார்.
இதனை அடுத்து தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு தொடரில் தேவி கதாபாத்திரத்திலும் கண்ணான கண்ணே தொடரில் அபர்ணா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.
இது தவிர சஹானா தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் மருத்துவர் அபிஷேக் என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை அப்லோடு செய்து வருகின்றார்.
படப்பிடிப்பில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக கொண்ட இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்கேன் வீடியோவை வெளியிட்டு, தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கே ஜி எப் படத்தில் இடம்பெற்ற தாலாட்டு பாட்டை பிண்ணனியில் ஒலிக்க இந்த தகவலை சஹானா அறிவித்துள்ளார். இதனால் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!