• Sep 20 2024

வரலட்சுமி நடிக்கும் கன்னித்தீவு போஸ்டர் வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு பெரிய மவுஸை பெற்றுக்கொடுத்தது.

இன்று, தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இவருடைய நடிப்பில் உருவாகி வரும் படங்கள் எல்லாம் விரைவில் வரிசையாக ரிலீசாக உள்ளன.இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார் வரலக்ஷ்மி .

அந்தவகையில், சுந்தர் பாலு இயக்கத்தில் கன்னித்தீவு என்ற படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா, மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோர் இப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிரடி சண்டைக்காட்சிகள் என உருவாகும் இப்படத்தில் 4 பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளனர். மேலும் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement