• Nov 14 2024

புனித் ராஜ்குமார் பிறந்தநாளில் வெளியாகும் கப்ஜா..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 கன்னட திரையுலகம் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் தரமான பான் இந்திய படங்களாக தொடர்ந்து கொடுத்து கெத்துக் காட்டி வருகிறது. அத்தோடு கடந்த ஆண்டு மட்டும் கேஜிஎஃப் 2, 777 சார்லி, விக்ராந்த் ரோணா, காந்தாரா என மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை கன்னட திரையுலகம் நடத்தி இந்தியாவிலேயே மிகப்பெரிய சினிமா சந்தையாக மாறியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் நடிப்பில் கேஜிஎஃப் ஸ்டைலில் உருவாகியுள்ள 'கப்ஜா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.

'அப்பு' என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக இந்த படம் வெளியாகிறது.

பாலிவுட் படங்கள் கடந்த ஆண்டு படுத்தே விட்ட நிலையில், தென்னிந்திய சினிமாவின் கை பெரிதும் ஓங்கியது. அதிலும், குறிப்பாக கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களால் ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையும் கன்னட திரையுலகம் மீது விழுந்தது. அத்தோடு ஆஸ்கர் நாமினேஷன் வரை காந்தாரா போட்டியிடும் அளவுக்கு கன்னட திரையுலகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கடந்த சில ஆண்டுகளில் எட்டி உள்ளது வியக்க வைக்கிறது.


அத்தோடு கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. அவர்களின் கடின உழைப்பு தான் அடுத்தடுத்து பெரிய பான் இந்தியா படைப்புகள் உருவாக காரணம் என்கின்றனர். நடிகர்களுக்கு அதிக சம்பளத்தை ஒதுக்காமல் படத்திற்காக செலவிட்டு தரமான படங்களை உருவாக்கி வருகின்றனர். 16 கோடியில் உருவான காந்தாரா 400 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனையை படைத்தது.

இதனையடுத்ததாக உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகிறது.

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'கே. ஜி எஃப்' படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

அத்தோடு இப் படத் தொகுப்பு பணிகளை தீபு எஸ் குமார் கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், என மூன்று சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்," 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் 'கப்ஜா'. இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டேக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். " என்றார்.

அத்தோடு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ம் தேதி 7 மொழிகளில் பிரம்மாண்ட பான் இந்தியா ரிலீஸாக இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் கேஜிஎஃப் 2, சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ஜான் கொக்கனும் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement