இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பருத்தி வீரன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகின்றார். அதுமட்டும் இல்லாமல் இப்போது வரை அவருக்கு பருத்திவீரன் தான் பெரிய அடையாளமாக இருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சம்பளப் பிரச்சினை குறித்து இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் அவர்கள் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. ஆனால், இதுவரை கார்த்தி இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் கஞ்சா கறுப்பும் குரல் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, சூர்யா, கார்த்தி என சிவகுமார் குடும்பமே அமீரை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், ஞானவேல்ராஜா, சூர்யா ஆகியோர் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டதாகவும், அமீர் தான் கடன் வாங்கி ஷூட்டிங் நடத்தியதாகவும் பல உண்மைகளை வெளியிட்டார்.
மேலும், கல்லூரி நிகழ்ச்சி, சினிமா ப்ரமோஷன் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் 'என்ன மாமா சௌக்யமா?' எனும் வசனத்துடன்தான் தோரணையாக பேச ஆரம்பிக்கிறார் கார்த்தி. இந்த உடல்மொழியும் பிரபலமான வசனத்தையும் சொல்லித்தந்தது அமீர் அண்ணன்தானே?. இனி இதை பேசாமல் மேடையில் ஏறும் தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலா இல்லையென்றால் சூர்யா கிடையாது. அதேபோல், அமீர் இல்லையென்றால் கார்த்தி கிடையாது. ஆனால், அந்த மரியாதை கூட இல்லாமல் கார்த்தி இருப்பது சரி இல்லை எனவும் விமர்சித்துள்ளார். முதல் படத்திலேயே இப்படியொரு சூப்பர் ஹிட் கொடுத்த அமீர் தான் கார்த்திக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். இதனை கார்த்தியும் அவரது குடும்பமும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கஞ்சா கருப்பு குறிப்பிட்டுள்ளார்.
Listen News!