தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் கைதி. கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, நரேன்,அர்ஜுன் தாஸ், தீனா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பாடல்கள் எதுவும் இல்லாமல் வெளியாகியது.இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதனையடுத்து மாஸ்டர், விக்ரம் என தனது அடுத்தடுத்த படங்களில் பிசியானார் லோகேஷ் கனகராஜ். கார்த்தியும் புதிய புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். இதனால் 'கைதி 2' படம் எப்போது துவங்கும் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கைதி 2' படம் நிச்சயம் உருவாகும் என தெரிவித்துள்ளார் கார்த்தி.
100% இந்தப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் நலன் குமாராசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷுட்டிங் 50% நிறைவடைந்துள்ளது என்றும், இதனையடுத்து ’96’ பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
லோகேஷ் கனகராஜ் தற்போது 'லியோ' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனையடுத்து ரஜினி நடிப்பில் 'தலைவர் 171' படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் 'கைதி 2' படத்தை இயக்குவதற்கான வேளைகளில் லோகேஷ் கனகராஜ் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!