கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா ஃபதேஹி. இவர் தற்போது மும்பையில் தங்கி இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்தி டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அத்தோடு கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நோரா ஃபதேஹி. எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார்.
அத்தோடு வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேஹி தான். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஆடி வருகின்றார். அத்தோடு குத்துப் பாட்டா கூப்பிடு நோராவை என்று இயக்குநர்கள் சொல்லும் அளவுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடுவார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார்.அத்தோடு இரண்டு வெப்தொடர்களிலும் நடித்திருக்கிறார் நோரா. ஆயுஷ்மான் குரானாவின் ஆக்ஷன் ஹீரோ படத்தை விளம்பரம் செய்ய தி கபில் சர்மா நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோரா ஃபதேஹி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அப்பொழுது சொன்னது பற்றி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
கபில் சர்மா நிகழ்ச்சியில் நோரா ஃபதேஹி கூறியதாவது, என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன். உடனே பதிலுக்கு என்னை அறைந்தார் என்றார்.
நோரா மேலும் தெரிவிக்கையில், நானும் பதிலுக்கு அந்த நடிகரை அறைந்தேன். அவர் மீண்டும் என்னை அறைந்ததுடன் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். அது ரொம்ப மோசமான சண்டையாக இருந்தது என்றார்.மேலும் இப்படியொரு அதிர்ச்சிகரமான விஷயத்தை சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே கூறினார் நோரா ஃபதேஹி. அதை கேட்ட கபில் சர்மாவோ, அந்த நடிகர் நிச்சயம் கஷ்டப்படுவார் என்றார். கண்டிப்பாக, அந்த நாய் என்று தெரிவித்தார் நோரா ஃபதேஹி.
நோரா ஃபதேஹி கூறியதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது, இது ஏதோ ஜாலியான சம்பவம் போன்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். அத்தோடு முதலில் குழப்பமாக இருந்தது. ஒன்று அந்த சம்பவத்தால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டதை சிரித்து மழுப்புகிறார். இல்லை என்றால் கஷ்டத்தை சிரித்து சமாளிப்பது தான் நோராவின் வழி போன்று. நோரா தைரியமாக சொல்லிவிட்டார். ஆனால் இப்படி எத்தனை நடிகைகளுக்கு நடந்திருக்கிறதோ என தெரிவித்துள்ளனர்.
Listen News!