தமிழ் சினிமாவில் இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு புரிய வைப்பவர் தான் ம் இயக்குநர் ராஜு முருகன். இவரது இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளி வந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'ஜோக்கர்'.
இப்படம் தேசிய விருதினைப் பெற்றது என்பதும் முக்கியமாகும். தற்பொழுது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஜப்பான்'. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பதோடு நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் ஜப்பான்' படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) இன்று காலை காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
ராஜுமுருகன் - கார்த்தி - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்கிற தனித்துவமான, தரமான கூட்டணியின் மீது இப்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை 'ஜப்பான்' கண்டிப்பாக பல மடங்கு மிஞ்சும் என நம்பிக்கையுடன் படக்குழு வேலைகளைத் தொடங்கியுள்ளது.
Listen News!