• Nov 14 2024

கார்த்திக் கிருஷ்ணா தான் என்னுடைய அப்பா- முழு உண்மையையும் உடைத்த சக்கி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் பிரமாண்ட செலவில் உருவாகி ஓடும் சீரியல் தான் மௌனராகம் சீசன்2. இந்த சீரியலின் முதல்பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது.

விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஸ்ருதி செய்த குழப்பத்தால் வருண் சத்யா மீது சந்தேகப்பட்டதால் சத்யா வீட்டை விட்டு வெளியேறினார்.ஆனால் கடைசியில் தருண் மூலம் வருணுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வந்தது. சத்யா மீது எந்த தவறும் இல்லை என்பதையும் அவர் புரிந்துக் கொண்டார்.

இருப்பினும் சத்யா ஓர் போலீஸ் அதிகாரியின் வீட்டில் தங்கியிருக்கும் போது ஸ்ருதியின் பாட்டி அந்த போலீஸின் மகளை கடத்த சத்யாவுக்கு எதிராக வருண், தருண், மனோகர் என மொத்த குடும்பத்தையும் ஸ்ருதியும் ஷீலாவும் திருப்பி விடுகின்றனர். ஆனால் அதற்குள் போலீஸ்குழந்தை அணுவை கண்டுப்பிடிக்க, எல்லோருக்கும் சத்யா மீது எந்த தப்பும் இல்லை என்பதும் தெரிய வருகிறது.

அதே நேரம், குழந்தையை கடத்திய ஸ்ருதியின் பாட்டியையும் சத்யா காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறார். இவ்வாறு இருக்கையில் உண்மையை புரிந்துக் கொண்ட வருண், சத்யாவை வீட்டுக்கு அழைக்கிறார். மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் சத்யா மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியை தரும் மற்றொரு உண்மையை போட்டு உடைக்கிறார். அதாவது, கார்த்திக் கிருஷ்ணா தான் தன்னுடைய அப்பா என்கிறார்.

அதுமட்டுமில்லை மல்லிகா பற்றியும் சொல்கிறார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது சீரியல் எபிசோடில் தான் தெரிய வரும். முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக மெளன ராகம் சீசன் 2 சீரியல் பயணிப்பது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement