• Nov 19 2024

அக்கா, தங்கை இருவரையும் மணம் முடித்த கார்த்திக்.. நிஜத்தில் பல நடிகைகளுடன் தொடர்பா..? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 80,90 களில் பிளே பாய் நடிகராகத் திகழ்ந்து வந்த ஒருவர் தான் நடிகர் கார்த்திக் 'அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த இவர் அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார். 


இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதிலும் குறிப்பாக இவருக்கு ஆண்களைக் காட்டிலும் பெண் ரசிகர்கள் தான் அதிகம். அதுமட்டுமல்லாது கார்த்திக் சினிமா வாழக்கையை தாண்டி நிஜத்திலும் பல நடிகைகளுடன் காதல் உறவில் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். 


அந்தவகையில் நடிகை ஸ்ரீபிரியா, கார்த்திக்கை ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் கார்த்திக் அவருடன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 


இதனையடுத்து கார்த்திக் 1988-ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர்  இவர் முதல் மனைவி ராகினியின் தங்கையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தற்போது இருவருடனும் ஒரே வீட்டில் கார்த்திக் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 


எது எவ்வாறாயினும் கார்த்திக் அந்தக் காலத்தில் பல நடிகர்களுடனும் காதல் உறவில் இருந்தார் என்ற தகவலானது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement