தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவான 'வாரிசு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படமானது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். அந்த படத்தை தற்போதைக்கு 'தளபதி 67' என்று அழைத்து வருகின்றர்க. அந்தவகையில் 'மாஸ்டர்' படத்தை அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் படங்களில் வில்லன் கதாபாத்திரம் வெயிட்டானதாக இருக்கும்.
அதாவது முன்னதாக அவர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதி தான் ஹீரோவை விட ஸ்கோர் செய்தார். இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்குமாறு நவசர நாயகன் கார்த்திக்கிடம் கேட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் லோகேஷ் கனராஜ் கேட்டதற்கு நடிக்க முடியாது தம்பி என்று கூறிவிட்டாராம் கார்த்திக்.
இதற்கான உண்மையான காரணம் என்னவெனில் அவரின் உடல்நிலை தான். அதாவது கார்த்திக் பல காலமாக கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் மருத்துவமனையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டார். கால் வலி சற்று அதிகமாக இருப்பதால் பிசியோதெரபி செய்கிறாராம். ஒரு மணிநேரத்திற்கு மேல் அவரால் நிற்க முடியாது. அப்படி நின்றால் வலி அதிகமாகிவிடுமாம்.
அந்தவகையில் கால் வலியால் தான் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்துள்ளார் கார்த்திக். அந்தக் கதாபாத்திரம் பிடித்தபோதிலும் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் தான் பின்பு இயக்குநர் மிஷ்கினை ஒப்பந்தம் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மேலும் கார்த்திக்கால் ஒரு மணிநேரத்திற்கு மேல் நிற்க முடியாது என்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் கவலை அடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என வேதனையும் அடைந்துள்ளனர்.
Listen News!