• Sep 21 2024

கார்த்தி செய்த செயல்- ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்-அப்பிடி என்னதான் செய்தார்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விருமன் பட பிரஸ் மீட்டில் பேசிய கார்த்தி, சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிகளை சீரமைக்க செல்வந்தர்கள் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, ஷூட்டிங்கின் போது நடந்த விஷயம் ஒன்றை கூறினார்.

தேனி அருகே உள்ள கிராமத்தில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி வந்து அருகிலுள்ள பள்ளியை பார்க்க வருமாறு அழைத்தாராம். எனினும் அப்போது ஷூட்டிங்கிற்கு நேரமானதால் பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி, பின்னர் சென்று அந்த பள்ளியை பார்த்தபோது ஷாக் ஆகிவிட்டாராம்.

ஆங்காங்கே இடிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது அந்த பள்ளி. எனினும் இதையடுத்து அதே பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வரும் தனது நண்பன் மற்றும் அருகிலுள்ள சில செல்வந்தர்கள் உதவியுடன் கார்த்தி சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து அந்த பள்ளியை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

மேலும் அவர்களின் உதவியால், சிதிலமடைந்து கிடந்த அந்த பள்ளி இன்று சூப்பராக மாறி இருக்கிறது. இதனை செய்துகொடுத்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு அந்த பள்ளி நிர்வாகத்தினரும் நன்றி கூறியுள்ளனர். இதையடுத்து பேசிய கார்த்தி, அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டாலும் அது சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சரியான வகையில் சென்று சேருவதில்லை என கூறினார்.

இதுபோன்று சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிகளை சீரமைக்க செல்வந்தர்கள் முன்வர வேண்டுமென கார்த்தி கேட்டுக்கொண்டார். கார்த்தியின் இந்த செயலைப் பார்த்து வியந்து போன நெட்டிசன்கள் அவரை ரியல் ஹீரோ பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement