2004 இல் பருத்தி வீரன் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். ஆயிரத்தில் ஒருவன்,மெட்ராஸ்,போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருகின்றார். இதனை தொடர்ந்து பையா,நான் மகான் அல்ல,சிறுத்தை, காஷ்மோரா,தோழா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டார். சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம் பேர் விருது, எடிசன் விருது போன்றவற்றை பெற்றார்.
மேலும் இவர் மாநகரம், மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கைதி.கடந்த 2019 ஒக்டோபர் 25 இல் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும்,நல்ல வரவேற்பை பெற்றது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நரேன், அர்ஜூன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பாடல்கள் இன்றி உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 'கைதி' மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் அஜய் தேவ்கண் நடிப்பில் "போலா" என்ற பெயரில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
அந்தவகையில் கைதி திரைப்படம் மிக பிரமாண்ட முறையில் ரஷ்யாவில் இன்று வெளியாகிறது. "உஸ்னிக்" என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது.உஸ்னிக் படத்தினை ரஷ்யாவின் 4 சீசன் கிரியேஷன்ஷ் வெளியிடுகிறது.
Listen News!