'கொம்பன்' படத்தை தொடர்ந்து கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடித்த 'விருமன் ' திரைப்படம், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் மட்டுமே நெகடிவ் கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், பலர் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலம் படத்தை வெற்றிபெற செய்துள்ளனர்.
எனினும் குறிப்பாக இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ள, பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முதல் படத்தியிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.
அத்தோடு யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே அல்டிமேட் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இந்த படத்தில் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராஜ்கிரன், சூரி, பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி என அனைவரும் தங்களின் கதாபாத்திரத்திரத்திற்கு பொருந்தி நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள இந்த படத்தை, ஏற்கனவே தன்னுடைய சகோதரர் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை தயாரித்த சூர்யா தான் தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் 6 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே ரூ. 1.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். எனினும் இதற்கு மேல் பட வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
காரணம் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. எனவே இரண்டு படங்களின் வசூல் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
Listen News!