தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் ராஜு முருகன். இது தவிர இவர் தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் ஜிப்ஸி.
ஜுவா நடித்திருந்த இப்படமானது எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாததால் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்துக்காக கார்த்தி மீசையை எல்லாம் எடுத்து ஸ்டைலிஷான லுக்குக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பொன்னியின் செல்வன் ரிலீஸூக்கு பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சமீபத்தில் ஹிட்டான புஷ்பா படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும். மேலும் கார்த்தியின் கைதி 2 குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
Listen News!