தமிழ் சினிமாவில் கலைக்குடும்பம் என்ற பெயர் நடிகர் சிவகுமாரின் குடும்பத்திற்கே சூட்ட வேண்டும். அந்த வகையில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, அவருடைய மருமகள் ஜோதிகா இவர்கள் எல்லோருமே சிறந்த நடிகர்கள் என்ற பெயர் வாங்கியவர்கள்.
ஆரம்பத்தில் சூர்யா நடிக்க தெரியாமல் தான் சினிமாவிற்குள் வந்தார். அவரின் முதல் படத்தில் நடிக்கவோ, நடனமாடவோ தெரியாமல் இருந்தார். ஆனால் இப்போது தேசிய விருது வாங்கும் அளவிற்கு முன்னேறி விட்டார். இதற்கு அவரின் கடின உழைப்பு தான் காரணம்.
ஆனால் கார்த்தி இவருக்கு நேர் மாறாக இருந்தார். அமெரிக்காவில் படித்து வளர்ந்தாலும் இவரின் என்ரி உதவி இயக்குனராக அதுவும் மணிரத்னத்திடம் இருந்து தான் இவரின் பயணம் ஆரம்பித்திருக்கிறது.மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் தான் கார்த்தி உதவி இயக்குனராக பணிபுரிய ஆரம்பித்தார்.
அந்தப் படத்தில் சூர்யா உட்பட சித்தார்த், மாதவன் போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான படம். அந்த சமயத்தில் தான் கார்த்தி அமெரிக்காவில் படிப்பை முடித்து நேராக மணிரத்தினத்திடம் அஸிஸ்டெண்டாக சேர்ந்தாராம்.
சூர்யாவும் அந்தப் படத்தில் நடித்ததால் சூர்யாவின் காட்சிகள் முடிந்ததும் சூர்யா கார்த்தியிடம் எல்லாம் ஓகே வா என்று கேட்பாராம். மேலும் மணிரத்னம் எப்பவும் ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசுவார். அவரின் ஆங்கிலம் சரளமாக இருந்ததால் சில சமயங்களில் அவர் சொன்ன வார்த்தைகள் சூர்யாவிற்கு புரியாதாம்.
அதை தம்பி கார்த்தியிடம் தான் மணிரத்னம் என்ன சொல்கிறார் என்று கேட்பாராம். ஏனெனில் கார்த்தி அமெரிக்காவில் படித்ததால் அவருக்கு மிக எளிதாக புரிந்திருக்குமாம். இந்த மாதிரியான பல உதவிகளை ஆயுத எழுத்து படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கார்த்தி சூர்யாவிற்காக செய்திருக்கிறாராம்.
Listen News!