• Nov 14 2024

"திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை"- வைரலாகும் கஸ்தூரியின் திடீர்ப் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபல்யமானவர் நடிகை கஸ்தூரி. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். ஆனால் சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அன்று தொடக்கம் இன்றுவரை சினிமா சார்ந்த கருத்துகளையும் சரி, அரசியல் சார்ந்த கருத்துகளையும் சரி துணிவாக பேசுகின்ற ஒருவராக கஸ்தூரி விளங்கி வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது போட்டுள்ள டுவீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அதாவது திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

இதனையடுத்து வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை யாரும் நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். 


அத்தோடு இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பிய சம்பவம் பூதாகரமாகியுள்ளது. 

அத்தோடு திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அதனால் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையங்களில் படையெடுத்துள்ளதாகவும் செய்திகள் வாயிலாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், பீகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. 


இதனையடுத்து டுவிட்டரில் இது தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் சூழலில் தான் நடிகை கஸ்தூரியும் டுவிட் ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது "வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை'' என்று கஸ்தூரி கூறியுள்ளார். இவரின் இந்தப் பதிவானது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement